திருப்பூர்:தீபாவளியை முன்னிட்டு, திருப்பூரில் 11ம் தேதி சிறப்பு பஸ் இயக்கம் துவங்கியது. முதல் இரு நாட்கள், 90 பஸ்களும், தீபாவளிக்கு முந்தைய தினம், 110 பஸ்களும் இயக்கப்பட்டன. திருச்சி, சேலம் மார்க்கத்தில் அதிகளவில் பயணிகள் பயணம் செய்தனர். தென் மாவட்டங்களுக்கு கூட்டம் குறைவாக இருந்தது.தீபாவளியன்று சிறப்பு பஸ் இயக்கம் நிறுத்தப்பட்டது. நேற்று முதல் வரும் 18ம் தேதி வரை, 60 சிறப்பு பஸ்கள் திருப்பூரில் இருந்து திருச்சி, மதுரை, தேனி, சேலத்துக்கு இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து இன்றும், நாளையும் மூன்று பஸ்கள், திருப்பூர் வருகின்றன.போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், 'வழக்கமாக தீபாவளிக்கு முந்தைய நாள், 90 சதவீத பயணிகள் சொந்த ஊர் பயணிப்பர். அதை கருத்தில் கொண்டு முழு அளவில் பஸ் இயக்கப்படும்.இந்தாண்டு, தீபாவளிக்கு முந்தைய நாளான 12ம் தேதி இரவு அதிகளவில் பயணிகள் பயணித்தனர்; 13ம் தேதி எதிர்பார்த்த அளவில் கூட்டமில்லை. இந்தாண்டு, 80 சதவீதம் பேர் மட்டுமே வெளியூர் பயணித்துள்ளனர். அதாவது, 20 சதவீதம் கூட்டம் குறைந்திருந்தது. பயணியர் திருப்பூர் திரும்புவதை பொருத்து, பஸ்கள் இயக்கப்படும்'' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE