ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே மண்டபம் முகாமில் குடிநீர் சப்ளை இன்றி, தெரு விளக்குகள் தெரியாமல் அகதிகள் அவதிபடுகின்றனர்.
இலங்கையில் ஏற்பட்ட இனப்போரில் ஏராளமான தமிழர்கள் அகதியாக மண்டபம், மதுரை, திருச்சி உள்ளிட்ட தமிழகத்தில் 115 முகாமில் தங்கி உள்ளனர். இதில் மண்டபம் முகாமில் தங்கியுள்ள 1800 பேருக்கு குடிநீர், மின்சாரம் இன்றி பாதிக்கின்றனர்.முகாமில் உள்ள தெரு குழாயில் 3 நாட்களுக்கு ஒருமுறை, அதுவும் 15 முதல் 30 நிமிடம் மட்டுமே குடிநீர் வருகிறது. இதனால் குடிநீருக்காக தனியார் லாரி, டிராக்டரில் ஒரு குடம் ரூ.10க்கு குடிநீரை அகதிகள் வாங்குகின்றனர்.
மேலும் முகாமில் பழுதான பல தெருவிளக்குகளை அகற்றி, புதிய விளக்குகள் பொருத்தாததால் முகாம் இருளில் மூழ்கி கிடக்கிறது. மண்டபம் முகாமில் குடிநீர், தெரு விளக்கு பிரச்சனைக்கு தனிதுணை கலெக்டர் தீர்வு காண வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE