ராமநாதபுரம் : ராமநாதபுரம் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், நாட்டுகோழிகள் வளர்ப்பிற்கு கோழிகுஞ்சுகள், தீவனம் கொள்முதல் செய்ய 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.
மாவட்டத்தில் உள்ள 11 ஒன்றியங்களுக்கு தலா 5 வீதம் 55 பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். முதலில் ஒன்றியத்திற்கு 2 அல்லது 3 பயனாளிகளை தேர்வு செய்து 1000 கோழிக்குஞ்சுகள், 1500 கிலோ தீவனம், இன்குபேட்டர் கொள்முதல் செய்வதற்கு 50 சதவீதம் மானிய தொகை வழங்கப்படும். பொருளாதார ரீதியாக ஏழ்மையில் உள்ள நபர்கள், கணவரை இழந்தவர்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
பயனாளிகளுக்கு சொந்த திறனில் 2500 சதுர அடியில் 1000 கோழிகுஞ்சுகளை பராமரிப்பதற்கு கொட்டகை அமைக்க வேண்டும். வேறு எந்த திட்டத்திலும் பயன்பெற்றிருக்க கூடாது. தகுதியுள்ளவர்கள் நவ., 23க்குள் அருகேயுள்ள கால்நடை மருந்தகம் கால்நடை உதவி மருத்துவர்களிடம் விண்ணப்பித்து பயன்பெறலாம்.------
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE