பொது செய்தி

தமிழ்நாடு

அகல் விளக்கேற்றி வீடுகள் ஜொலிப்பு :வடமாநில தொழிலாளர் கொண்டாட்டம்

Added : நவ 15, 2020
Share
Advertisement
திருப்பூர்:தீபாவளி, நேற்றுமுன்தினம் கொண்டாடப்பட்டது. பனியன் உற்பத்தி நகரான திருப்பூரில், திண்டுக்கல், மதுரை, தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற வெளிமாவட்டங்கள், ஒடிசா, ஜார்கண்ட், பீகார், மகாராஷ்டிரா போன்ற வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த தொழில்முனைவோர் வசிக்கின்றனர்.புத்தாடை அணிந்தும், பட்டாசு ரகங்களை வாங்கி வெடித்து, தமிழக மக்கள் பண்டிகை

திருப்பூர்:தீபாவளி, நேற்றுமுன்தினம் கொண்டாடப்பட்டது. பனியன் உற்பத்தி நகரான திருப்பூரில், திண்டுக்கல், மதுரை, தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற வெளிமாவட்டங்கள், ஒடிசா, ஜார்கண்ட், பீகார், மகாராஷ்டிரா போன்ற வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த தொழில்முனைவோர் வசிக்கின்றனர்.புத்தாடை அணிந்தும், பட்டாசு ரகங்களை வாங்கி வெடித்து, தமிழக மக்கள் பண்டிகை கொண்டாடினர்.நேற்றுமுன்தினம் அமாவாசை துவங்கியது. இதையடுத்து, திருப்பூரில் வர்த்தக நிறுவனங்கள் வைத்திருக்கும் வெளிமாநில வர்த்தகர்கள், புது கணக்கு துவக்கினர்; வாகனங்களுக்கு பூஜை செய்தனர். பிரதமர் மோடி, 'நாட்டை காக்கும் ராணுவ வீரர்களுக்காக, தீபாவளி நாளில், வீட்டில் தீபம் ஏற்றுங்கள்,' என்றார்.திருப்பூர் பகுதி வடமாநில மக்கள், நேற்றுமுன்தினம் இரவு, தங்கள் வீடுகளில், அகல் விளக்குகளை ஏற்றி, பிரகாசிக்க செய்திருந்தனர்; லட்சுமிக்கு, சிறப்பு பூஜைகள் செய்தனர். ராயபுரம், சூசையாபுரம், செரீப் காலனி, பெரியபுத்துார் போன்ற வடமாநிலத்தவர் அதிகம் வசிக்கும் பகுதிகள், விளக்கு ஒளியில், பளிச்சிட்டன. இம்மக்கள் நேற்று, பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X