மருத்துவமனை வாசலில் பெண்ணுக்கு பிரசவம்

Added : நவ 15, 2020
Share
Advertisement
பந்திப்பூர்: ஜம்மு - காஷ்மீரில், மருத்துவமனையில் இருந்து, கொரோனா பாதித்த கர்ப்பிணியை, டாக்டர்கள் வெளியேற்றினர். இதனால், அந்த பெண்ணுக்கு மருத்துவமனை வாசலில் பிரசவம் நடந்தது.ஜம்மு - காஷ்மீரின் பந்திப்பூர் மாவட்டம் வேவன் கிராமத்தைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியை, அவரது குடும்பத்தினர் மாவட்ட அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதித்தனர். அங்கு நடந்த பரிசோதனையில்,

பந்திப்பூர்: ஜம்மு - காஷ்மீரில், மருத்துவமனையில் இருந்து, கொரோனா பாதித்த கர்ப்பிணியை, டாக்டர்கள் வெளியேற்றினர்.

இதனால், அந்த பெண்ணுக்கு மருத்துவமனை வாசலில் பிரசவம் நடந்தது.ஜம்மு - காஷ்மீரின் பந்திப்பூர் மாவட்டம் வேவன் கிராமத்தைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியை, அவரது குடும்பத்தினர் மாவட்ட அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதித்தனர். அங்கு நடந்த பரிசோதனையில், கர்ப்பிணிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிஆனது.இதனால், அவரை பிரசவத்திற்கு அனுமதிக்க மறுத்த டாக்டர்கள், அங்கிருந்து, 25 கி.மீ., தொலைவில் கொரோனா சிகிச்சைக்கான மருத்துவமனைக்கு செல்லும்படி கூறினர்.

அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கெஞ்சிக்கேட்டும், டாக்டர்கள் சம்மதிக்கவில்லை என்பதால், கர்ப்பிணியை வெளியே அழைத்து வந்தனர். ஆனால் மருத்துவமனை வாசலில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது.கர்ப்பிணி கதறி துடித்த நிலையிலும், மருத்துவமனையில் இருந்து ஒருவரும் உதவிக்கு வரவில்லை. அங்கிருந்த பெண்கள் உதவியுடன், அந்த இடத்திலேயே பிரசவம் நடந்தது. இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள், மருத்துவமனை முன் போராட்டம் நடத்தினர்.

தகவல் அறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள், 'கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, உரிய பாதுகாப்பு வழிமுறைகளுடன் ஏன் பிரசவம் பார்க்கவில்லை' என, விளக்கம் அளிக்கும்படி டாக்டர்களுக்கு 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளனர்.அதிகாரி ஒருவர் கூறும்போது, 'டாக்டர்களின் மனிதாபிமானமற்ற நடவடிக்கை தொடர்பாக விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 'நோயாளியின் நிலை அறிந்தும், அவரை சிறப்பு மருத்துவமனைக்கு அனுப்பியது உறுதியானால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X