பார்க்கிங் சிக்கல்: அலறுது அவிநாசி

Added : நவ 15, 2020
Share
Advertisement
அவிநாசி:அவிநாசியில் அகலமான ரோடு, வீதிகள் இருப்பினும், அவை தேவைக்கேற்ப விரிவு படுத்தப்படவில்லை.இருநாளுக்கு முந்தைய தீபாவளி பண்டிகை கோலாகலத்தில், கடைசி நேர 'பர்சேஸ்' செய்வதில் மக்கள் ஆர்வம் காட்டிய நிலையில், மேற்கு ரத வீதி, சேவூர் ரோடு சந்திப்பு என, பிரதான ரோடுகளில், போக்குவரத்து நிரம்பி வழிந்தது; வாகனங்கள் ஊர்ந்து சென்றதால், அவ்வப்போது, நெரிசலும்

அவிநாசி:அவிநாசியில் அகலமான ரோடு, வீதிகள் இருப்பினும், அவை தேவைக்கேற்ப விரிவு படுத்தப்படவில்லை.இருநாளுக்கு முந்தைய தீபாவளி பண்டிகை கோலாகலத்தில், கடைசி நேர 'பர்சேஸ்' செய்வதில் மக்கள் ஆர்வம் காட்டிய நிலையில், மேற்கு ரத வீதி, சேவூர் ரோடு சந்திப்பு என, பிரதான ரோடுகளில், போக்குவரத்து நிரம்பி வழிந்தது; வாகனங்கள் ஊர்ந்து சென்றதால், அவ்வப்போது, நெரிசலும் ஏற்பட்டது.ரோட்டின் இருபுறமும் வாகனங்கள் பார்க்கிங் செய்து கொள்ளப்படுவதாலும், ரோட்டோர கடைக்காரர்கள், தங்கள் வாகனங்களை கடைகளுக்கு முன்பே பார்க்கிங் செய்து கொள்வதாலும், பண்டிகை மற்றும் விழாக்காலங்களில் நெரிசல் என்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.அவிநாசி - சேவூர் ரோட்டில், கடைக்கு வந்து செல்வோர் மற்றும் கடைக்காரர்கள் தங்கள் வாகனங்களை பார்க்கிங் செய்ய பிரத்யேக வாகன பார்க்கிங் தளம் ஏற்படுத்த வேண்டியது, காலத்தின் கட்டாயம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X