துபாய்: மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில், இந்திய மணமக்கள் முகமது ஜசீம் - அல்மாஸ் அகமதுக்கு, சமீபத்தில் திருமணம் நடந்தது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, வீட்டில் நடந்த திருமணத்தில், உறவினர்கள், நண்பர்கள் என யாரும் பங்கேற்கவில்லை. பின், வித்தியாசமான முறையில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பதற்காக, வீட்டின் வாசலில், அந்த புதுமணத் தம்பதி வந்து நின்றனர். சாலையில், கார்களில் வந்த அவர்களது உறவினர்களும், நண்பர்களும், காரில் இருந்தபடி, தம்பதியுடன் புகைப்படம் எடுத்துவிட்டு, அப்படியே புறப்பட்டனர். பரிசுகளை வழங்கவும், காரில் இருந்து இறங்கவும் அனுமதி வழங்கப்படவில்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE