பல்லடம்:பல்லடம் நகராட்சியில், கடைவீதி, தினசரி மார்க்கெட், வாரச்சந்தை உள்ளிட்ட அனைத்தும் அடங்கிய பகுதியாகஎன்.ஜி.ஆர்., ரோடு உள்ளது.பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில், பொருட்கள் வாங்க வரும் மக்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கிறது. தீபாவளியை முன்னிட்டு, கடைவீதியில் ஏற்பட்ட நெரிசலால், பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.''என்.ஜி.ஆர்., ரோட்டில், 'பார்க்கிங், நடைபாதை உள்ளிட்ட போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை. வியாபாரிகள் சிலர் நடைபாதையையும் ஆக்கிரமிப்பதால், வாகனங்கள் ரோட்டில் நிறுத்தப்படுகின்றன. நேர கட்டுப்பாடுகளை பின்பற்றாமல், கனரக வாகனங்கள் எல்லா நேரங்களிலும் வந்து செல்கின்றன. நெரிசலில் செல்வதால், நோய் தொற்று அபாயம் உள்ளது.குடும்பத்துடன் கடைவீதிக்கு வந்து செல்வது பாதுகாப்பற்றதாக உள்ளது. கடைவீதியில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதுடன், போலீசார் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியது அவசியம்'' என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE