வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபர் டொனால்டு டிரம்பின் குடியரசு கட்சியைச் சேர்ந்த ஆதரவாளர்கள் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது.
இதில் சிலர் காயமடைந்தனர்.அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் முடிந்து, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தேர்தல் முடிவுகளை ஏற்க, அதிபர் டொனால்டு டிரம்ப் மறுத்து வருகிறார். தேர்தல் நடைமுறையில் மோசடி நடந்ததாக, அவர் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்.மோதல்இந்நிலையில், டிரம்பின் ஆதரவாளர்கள், வாஷிங்டனில் நேற்று முன்தினம் பேரணி நடத்தினர்.
பேரணி அமைதியாக நடந்து கொண்டு இருந்தது. டிரம்புக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினர்.வெள்ளை மாளிகை அருகே, மாலையில் பேரணி கடந்தபோது, அந்த பகுதியில், இனவெறிக்கு எதிராக சிலர் பேரணி நடத்தினர். அவர்களுக்கும், டிரம்ப் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.டிரம்ப் ஆதரவாளர்கள் ஏந்தி வந்த பதாகைகள், அணிந்திருந்த தொப்பி உள்ளிட்டவற்றை, எதிர் கோஷ்டினர் பறித்து, தீவைத்து எரித்தனர். இதையடுத்து, இரு தரப்புக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அது வன்முறையாக மாறியது.கண்டனம்கம்பு உள்ளிட்டவற்றால் ஒருவரை ஒருவரை தாக்கினர். போலீசார் உடனடியாக விரைந்து, மோதலை தடுத்தனர்.இந்த வன்முறையில், இனவெறிக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களில் ஒருவருக்கு, முதுகில் கத்திக் குத்து விழுந்ததாக கூறப்படுகிறது. இதைத் தவிர, சில போலீசாரும் காயமடைந்தனர். இதனால், அந்தப் பகுதியில் நீண்ட நேரம் பதற்றம் நிலவியது.இந்த தாக்குதலுக்கு, அதிபர், டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, சமூக வலை தளங்களில், அவர் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டுள்ளார்.தன்னை தானே மன்னிக்க முடியுமா?தேசிய சட்டத்தின் கீழான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு, மன்னிப்பு அளிக்கும் அதிகாரம், அமெரிக்க அதிபருக்கு உள்ளது. இதை எதிர்க்கும் அதிகாரம், பார்லிமென்ட் உட்பட யாருக்கும் கிடையாது.அதே நேரத்தில், மாகாண சட்டங்களின் கீழுள்ள வழக்குகளில் இவ்வாறு மன்னிப்பு அளிக்க முடியாது.
இந்நிலையில், அதிபர் டிரம்ப் மீது, பல்வேறு வழக்குகள், மோசடி புகார்கள், வரி ஏய்ப்பு புகார் உள்ளிட்டவை உள்ளன. அதனால், தன்னைத் தானே அவர் மன்னிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.அமெரிக்க வரலாற்றில், இதுவரை எந்த அதிபரும், தன்னைத் தானே மன்னித்து கொண்டதில்லை. அதனால், இது தொடர்பாக தொடர்ந்து விவாதம் நடந்து வருகிறது.கடந்த, 2018ல், சமூக வலை தளத்தில் வெளி யிட்ட ஒரு செய்தியில், 'என்னை நானே ஏன் மன்னிக்க வேண்டும். அவ்வாறு நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை' என, டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.குடியுரிமை விவகாரம்டிரம்ப் உத்தரவுக்கு தடைகுழந்தைகளாக இருந்தபோது, அமெரிக்காவுக்கு அழைத்து வரப்பட்டு, உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருப்போருக்கு, குடியுரிமை அளிக்கும் வகையில், பராக் ஒபாமா அதிபராக இருந்தபோது, உத்தரவு பிறப்பித்திருந்தார்.
அந்த திட்டத்தை கைவிடுவதாக, அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் அறிவித்தது. அதற்கு, அந்த நாட்டின் உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தது.இந்நிலையில், இதில் கட்டுப்பாடுகளை விதிக்கும் வகையில், புதிய உத்தரவை, டிரம்ப் நிர்வாகம், இந்தாண்டு ஜூலையில் பிறப்பித்தது.இதை விசாரித்த, நியூயார்க் நீதிமன்றம், அந்த உத்தரவுக்கு தடை விதித்து தீர்ப்பு அளித்துள்ளது.'அதிபராக பதவியேற்றதும், உரிய ஆவணங்கள் இல்லாமல் இருக்கும் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படும்' என, அதிபராக தேர்வு செய்யப்பட்டு உள்ள, ஜோ பைடன் ஏற்கனவே அறிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE