புதுடில்லி: 'ஊழல், லஞ்சம் வாயிலாக சேர்த்த சொத்துகளை பறிமுதல் செய்யும் வகையில், சட்டத்திருத்தம் மேற்கொள்ள வேண்டும்' என, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
பிரபல வழக்கறிஞரும், பா.ஜ., வைச் சேர்ந்தவருமான அஸ்வினி குமார் உபாத்யாய், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு: நம் நாட்டில், லஞ்சம், கறுப்பு பணம், பினாமி சொத்து, வரி ஏய்ப்பு, பணமோசடி, உணவு தானியங்களில் கலப்படம் மற்றும் பதுக்கல், போதை மருந்து கடத்தல் போன்ற குற்ற செயல்கள் அதிகரித்து வருகின்றன.
நம் நாட்டில் ஊழலுக்கு எதிரான சட்டங்கள் மிக பலவீனமாக உள்ளதால், இந்த நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே, ஊழல், லஞ்சம் கறுப்பு பணம், பினாமி சொத்து சேர்ப்பு, வரி மோசடி போன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு, ஆயுள் தண்டனை வழங்குவதுடன், அவர்கள் முறைகேடாக சேர்த்த சொத்துகள் முழுவதையும் பறிமுதல் செய்ய வேண்டும்.இதற்கு வழி செய்யும் வகையில், ஊழல் தடுப்பு சட்டங்களில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். இதற்கான வழிகாட்டுதல்களை, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் வழங்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டு உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE