பொது செய்தி

தமிழ்நாடு

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்காத கிராமம்

Added : நவ 15, 2020
Share
Advertisement
புதுக்கோட்டை: ஆலங்குடி அருகே, பழந்தின்னி வவ்வால்களுக்காக அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக, தீபாவளிக்கு பட்டாசு வெடிக்காமல் தவிர்த்து வருகின்றனர்.புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மறமடக்கி கிராமத்தில் அறந்தாங்கி செல்லும் வழியில், சாலையோரம் அடர்ந்த ஆலமர காடு உள்ளது. இங்குள்ள மரங்களில் நுாற்றுக்கணக்கான பழந்தின்னி வவ்வால்கள், பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றன.

புதுக்கோட்டை: ஆலங்குடி அருகே, பழந்தின்னி வவ்வால்களுக்காக அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக, தீபாவளிக்கு பட்டாசு வெடிக்காமல் தவிர்த்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மறமடக்கி கிராமத்தில் அறந்தாங்கி செல்லும் வழியில், சாலையோரம் அடர்ந்த ஆலமர காடு உள்ளது. இங்குள்ள மரங்களில் நுாற்றுக்கணக்கான பழந்தின்னி வவ்வால்கள், பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றன. தினம்தோறும் இரவு நேரங்களில் அருகிலுள்ள வனப்பகுதிக்கு இரை தேடிச்செல்லும் வவ்வால்கள், பகல் நேரங்களில் இருப்பிடங்களுக்கு திரும்பி வந்து மரங்களில் தொங்கியபடி ஓய்வெடுக்கின்றன.

இப்பகுதியில், 2018ம் ஆண்டு, 16ம் தேதி, வீசிய கஜா புயலால் ஆலமரங்கள் பாதிக்கப்பட்டன. இதனால், இங்கு தங்கியிருந்த பல வவ்வால்கள் இறந்தன.உயிருடன் இருந்த மீதி வவ்வால்கள் மாற்று இடம் தேடி செல்லாமல், சேதமாகாமல் எஞ்சியிருந்த ஆலமரங்களில் வாழ்ந்து வருகின்றன. இப்பகுதி மக்கள், விவசாயிகள், வவ்வால்களை துன்புறுத்தாமல் பாதுகாப்பது மட்டுமின்றி, பிறர் வேட்டையாடுவதையும் தடுத்து வருகின்றனர். பட்டாசு சத்தத்தினால் ஏற்படும் அதிர்வுகளும், புகைமூட்டமும், வவ்வால்களுக்கு தீங்கு ஏற்படுத்தும்.

எனவே, இப்பகுதியில் இருந்து வேறுபகுதிக்கு வவ்வால்கள் இடம் பெயர்ந்து விடும் என்பதால், வவ்வால்கள் வாழ்ந்து வரும் பகுதியை சுற்றி வசித்து வரும் கிராம மக்கள், தீபாவளி பண்டிகை தருணத்தில் கூட, பட்டாசு வெடிப்பதைத் தவிர்த்து வருகின்றனர்.நேற்று முன்தினம் தீபாவளியன்றும், மறமடக்கி பகுதியில் உள்ள கிராம மக்கள், பட்டாசு வெடிப்பதை தவிர்த்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X