திருச்சி: புற்று நோய் பாதித்த மனைவி திடீரென இறந்ததால், கணவன் தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி மாவட்டம் கிராப்பட்டியை சேர்ந்தவர் மோகன்தாஸ், 70. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றார். இவர், தன் மனைவி சுமதி, 64 மற்றும் மகனுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடினர். பின் தம்பதி ஒரு அறையிலும், மகன் ஒரு அறையிலும் துாங்க சென்றனர்.
நேற்று காலை நீண்ட நேரமாகியும் கணவன், மனைவி இருவரும் அறையை விட்டு வெளியே வரவில்லை. மகன் பாலாஜி, கதவை தட்டிப்பார்த்து விட்டு, திறக்காததால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது, கட்டிலில் சுமதி இறந்து கிடந்தார். அருகில், மோகன்தாஸ், துாக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்எடமலைப்பட்டி புதுார் போலீசார் விசாரணை நடத்தினர்.
நீண்ட நாட்களாக புற்று நோயால் பாதித்த மனைவி, திடீரென இறந்த துக்கத்தில், கணவனும் துாக்கு போட்டு தற்கொலை செய்தது தெரிந்தது. சுமதி எப்படி இறந்தார். விஷம் அல்லது மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE