பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா: சிவகங்கை டிஸ்சார்ஜ் 6 ஆயிரத்தை நெருங்குகிறது

Added : நவ 16, 2020
Share
Advertisement
மதுரை; மதுரை மாவட்டத்தில் நேற்று 49 பேர் கொரோனாவிடம் இருந்து மீண்டனர். இதுவரை 18,527 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். புதிதாக 35 பேர் பாதிக்கப்பட்டனர். ஒருவர் பலியானார். மொத்த பாதிப்பு 19,318 ஆகும்.இதுவரை 429 பேர் இறந்துள்ளனர். தற்போது 362 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.திண்டுக்கல்திண்டுக்கல்லில் நேற்று 19 பேர் குணமாகினர். மொத்தம் 9722 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். புதிதாக 18 பேருக்கு

மதுரை; மதுரை மாவட்டத்தில் நேற்று 49 பேர் கொரோனாவிடம் இருந்து மீண்டனர். இதுவரை 18,527 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். புதிதாக 35 பேர் பாதிக்கப்பட்டனர். ஒருவர் பலியானார். மொத்த பாதிப்பு 19,318 ஆகும்.இதுவரை 429 பேர் இறந்துள்ளனர்.

தற்போது 362 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.திண்டுக்கல்திண்டுக்கல்லில் நேற்று 19 பேர் குணமாகினர். மொத்தம் 9722 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். புதிதாக 18 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 10,055 ஆக அதிகரித்தது. இன்னும் 144 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 189 பேர் உயிரிழந்துள்ளனர்.தேனிதேனி மாவட்டத்தில் நேற்று 14 பேர் டிஸ்சார்ஜ்' ஆகினர். மொத்தம் 16,181 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். புதிதாக 11 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 16, 439 ஆக உயர்ந்தது. நேற்று 63 வயது முதியவர் கொரோனாவால் உயிரிழந்தார். பலி எண்ணிக்கை 309 ஆனது.ராமநாதபுரம்ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று 9 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். 3 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். இதுவரை 6124 பேர் பாதிக்கப்பட்டதில் 5933 பேர் குணமடைந்தனர். 130 பேர் பலியாகியுள்ளனர். 61 பேர் சிகிச்சையில் உள்ளனர்.-

சிவகங்கைசிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒருவர் குணமடைந்தார். புதிதாக 3 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. மொத்தம் 6130 பேர் பாதிக்கப்பட்டதில் 5850 பேர் குணமடைந்தனர். இதுவரை 126 பேர் பலியாகியுள்ளனர். 155 பேர் சிகிச்சையில் உள்ளனர்.விருதுநகர்விருதுநகரில் நேற்று 9 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 13 பேருக்கு கொரோனா உறுதியானது. மொத்தம் பாதிக்கப்பட்ட 15,682 பேரில் 15,363 பேர் குணமடைந்துள்ளனர். 94 பேர் சிகிச்சையில் உள்ளனர். 225 பேர் பலியாகியுள்ளனர்.

திருநெல்வேலிதிருநெல்வேலியில் 15 பேர் டிஸ்சார்ஜ் ஆனதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 14,121 ஆனது. நேற்று 21 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 14603 ஆனது. தற்போது 273 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 209 பேர் இறந்துள்ளனர்.தென்காசிதென்காசியில் நேற்று 13 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மொத்தம் 7709 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று 7 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிப்பு 7937 ஆனது. தற்போது 73 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 155 பேர் இறந்துள்ளனர்

துாத்துக்குடிதுாத்துக்குடியில் நேற்று 15 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மொத்தம் 15,058 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பாதிப்பு 15467 ஆனது. தற்போது 274 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 135 பேர் இறந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X