ராமேஸ்வரம்; - பாம்பன் ரயில் பாலத்தில் சிக்கிய மிதவை படகை ஆறாவது நாளாக மீட்க முடியாமல் ரயில்வே பொறியாளர்கள் அவதிப்பட்டனர்.
ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில், 250 கோடியில் புதிய ரயில் பாலத்திற்கு துாண்கள் அமைக்கும் பணி ரிக் இயந்திரம், கிரேன் சுமக்கும் இரும்பு மிதவை படகு உதவியுடன் நடந்தது.நவ., 9ல் கடல் கொந்தளிப்பால் ஒரு மிதவை படகு தற்போதைய ரயில் பாலத்தில் மோதி, 120, 121வது துாண் இடையே சிக்கியது.ரயில்வே பொறியாளர்கள், மீனவர்கள் குழு நவ.,10 முதல் படகை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
கடல் கொந்தளிப்பு அதிகரிப்பால் மீட்க முடியவில்லை. ஆறாம் நாளான நேற்றும் படகை மீட்க முடியாமல் பொறியாளர்கள் சிரமப்பட்டனர்.சிக்கல்பாலத்தின் துாண்கள் மற்றும் கடல் பாறைக்கு இடையில் மிதவை படகு சிக்கியுள்ளதால் மீட்பதில் சிரமம் நீடிக்கிறது.இதனால் மிதவை படகின் பாரத்தை குறைக்கும் வகையில் கிரேனை தனியாக பிரித்தெடுத்து, படகை மீட்க பொறியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE