பொது செய்தி

தமிழ்நாடு

ஏமாற்றம் தந்த நிலக்கடலை சாகுபடி 

Added : நவ 16, 2020
Share
Advertisement
ஆண்டிபட்டி : நிலக்கடலை சாகுபடி விளைச்சல் குறைந்து விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.ஆண்டிபட்டி அருகே தெப்பம்பட்டி, ராசக்காள்பட்டி, பாலக்கோம்பை, வேலப்பர் கோயில், சித்தயகவுண்டன்பட்டி உட்பட கிராமங்களில் நிலக்கடலை சாகுபடி உள்ளது. இந்த ஆண்டு முன்கூட்டியே பெய்த மழையை நம்பி ஜூலை, ஆகஸ்ட்டில் இப்பகுதியில் 400-ஏக்கருக்கும் அதிகமாக நிலக்கடலை விதைப்பு செய்தனர்.

ஆண்டிபட்டி : நிலக்கடலை சாகுபடி விளைச்சல் குறைந்து விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

ஆண்டிபட்டி அருகே தெப்பம்பட்டி, ராசக்காள்பட்டி, பாலக்கோம்பை, வேலப்பர் கோயில், சித்தயகவுண்டன்பட்டி உட்பட கிராமங்களில் நிலக்கடலை சாகுபடி உள்ளது. இந்த ஆண்டு முன்கூட்டியே பெய்த மழையை நம்பி ஜூலை, ஆகஸ்ட்டில் இப்பகுதியில் 400-ஏக்கருக்கும் அதிகமாக நிலக்கடலை விதைப்பு செய்தனர். செடிகள் வளர்ந்து கடலை பிடிக்கும் நேரத்தில் மழை பெய்யவில்லை.

மீண்டும் பெய்த தாமதமான மழையில் நிலக்கடலை விளைச்சல் பாதித்தது. 3 மாதத்திற்குப்பின் தற்போது செடிகள் முதிர்ச்சி அடைந்ததால் அறுவடையை துவக்கினர். ஆனால் செடிகளில் நிலக்கடலையில் பருப்புகள் வளர்ச்சி இன்றி போனது. இதனால் கிலோ ரூ.15 முதல் 16 வரை விலை போவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.----

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X