சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விசைத்தறி தொழிலாளி அடித்துக் கொலை

Added : நவ 16, 2020
Share
Advertisement
சூலுார்:கோவை அருகே விசைத்தறி தொழிலாளியை அடித்துக் கொலை செய்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தை ஆறுமுக பெருமாள் மகன் முத்துக்குட்டி, 42. மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். இவர், கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அடுத்த கணபதிபாளையத்தில் தங்கி விசைத்தறி குடோனுக்கு வேலைக்கு சென்று வந்தார்.நேற்று முன்தினம் தீபாவளி விடுமுறை

சூலுார்:கோவை அருகே விசைத்தறி தொழிலாளியை அடித்துக் கொலை செய்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தை ஆறுமுக பெருமாள் மகன் முத்துக்குட்டி, 42. மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். இவர், கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அடுத்த கணபதிபாளையத்தில் தங்கி விசைத்தறி குடோனுக்கு வேலைக்கு சென்று வந்தார்.நேற்று முன்தினம் தீபாவளி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்துள்ளார். வீட்டுக்கு வந்த நண்பர்களுடன் புறப்பட்டு வெளியில் சென்றுள்ளார். இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.நேற்று காலை குடும்பத்தினர், அக்கம்பக்கத்தினர் பல இடங்களில் தேடினர். அப்போது, அதே பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் முத்துக்குட்டி உடலில் காயங்களுடன் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். தடயங்கள் சேகரிக்கப்பட்டன. முதல் கட்ட விசாரணையில், முத்துக்குட்டி நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்த சென்றதாகவும், அப்போது அவர்களுக்குக்குள் ஏற்பட்ட மோதலில், அடித்துக் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது. குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X