பொது செய்தி

தமிழ்நாடு

தீபாவளியால் மின் நுகர்வு 6 கோடி யூனிட் குறைந்தது

Added : நவ 16, 2020
Share
Advertisement
சென்னை: தீபாவளியை கொண்டாட்டத்தால், அன்று மட்டும், தமிழக மின் நுகர்வு, 6.20 கோடி யூனிட்கள் சரிந்தது.தமிழகத்தில், வீடு, தொழிற்சாலை உள்ளிட்ட அனைத்து பிரிவுகளுக்கும், மின் வினியோகம் செய்யும் பணியை, அரசு நிறுவனமான, மின் வாரியம் மட்டுமே மேற்கொள்கிறது. ஒரு நாள் அதாவது, 24 மணி நேரமும் பயன்படுத்தும் மின்சார அளவு, மின் நுகர்வு எனப்படுகிறது.தமிழக மின் நுகர்வு, தினமும் சராசரியாக, 30 கோடி

சென்னை: தீபாவளியை கொண்டாட்டத்தால், அன்று மட்டும், தமிழக மின் நுகர்வு, 6.20 கோடி யூனிட்கள் சரிந்தது.

தமிழகத்தில், வீடு, தொழிற்சாலை உள்ளிட்ட அனைத்து பிரிவுகளுக்கும், மின் வினியோகம் செய்யும் பணியை, அரசு நிறுவனமான, மின் வாரியம் மட்டுமே மேற்கொள்கிறது. ஒரு நாள் அதாவது, 24 மணி நேரமும் பயன்படுத்தும் மின்சார அளவு, மின் நுகர்வு எனப்படுகிறது.தமிழக மின் நுகர்வு, தினமும் சராசரியாக, 30 கோடி யூனிட் என்றளவில் உள்ளது. இது, 2019 ஏப்., 12ல், 36.99 கோடி யூனிட்களாக அதிகரித்தது.

இதுவே, இதுவரையிலான உச்ச அளவு.தற்போது, மழை சீசன் துவங்கிய நிலையில், மழை பெய்தாலும், அனைத்து தொழில் மற்றும் வணிக நிறுவனங்களிலும், தீபாவளி வியாபாரம் களைகட்டியது.அதேசமயம், பனிப்பொழிவால், வீடுகளில், 'ஏசி' பயன்பாடு குறைந்துள்ளதால், தற்போது, மின் நுகர்வு, 30 கோடி யூனிட் கீழ் குறைந்துள்ளது. இது, இம்மாதம், 13ல், 25.91 கோடி யூனிட்களாக இருந்தது.அதற்கு அடுத்த நாள், தீபாவளி கொண்டாடப்பட்டது.

இதனால், தொழிற்சாலைகள், தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் விடுமுறை விடப்பட்டன.பலரும், வீடுகளை விட்டு வெளியே வந்து, பட்டாசு வெடித்தனர். பெரும்பாலான வீடுகளில், பூஜை அறைகள், வாயில்களில், மின் விளக்கிற்கு பதில், அகல் விளக்குகளில் தீபம் ஏற்றப்பட்டிருந்தன. இதனால், வீடுகளில், மின் பயன்பாடு வழக்கத்தை விட, குறைந்தது.

இதையடுத்து, தீபாவளி தினத்தன்று மட்டும், மின் நுகர்வு, 6.20 கோடி யூனிட் குறைந்து, 19.71 கோடி யூனிட்களாக சரிந்துள்ளது. இதனால், அனல், நீர் மின் உற்பத்தி மற்றும் மின் கொள்முதலை, மின் வாரியம், வெகுவாக குறைத்து உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X