கொடைக்கானல் : கொடைக்கானல், தாண்டிக்குடி கீழ்மலைப்பகுதியில் திராவிட கட்சிகள் மக்கள் செல்வாக்கை இழந்து வருகின்றன.இப்பகுதிகளில் அ.தி.மு.க., தி.மு.க.,ஒன்றிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அ.தி.மு.க., பிரதிநிதிகளின் செயல்பாடுகளால்,எம்.எல்.ஏ., எம்.பி., தி.மு.க., வசம் சென்றது. இதனால் சுணக்கமடைந்த அ.தி.மு.க.,விற்கு புது ரத்தம் பாய்ச்ச வேண்டும் என தொண்டர்கள் எதிர்பார்த்த நிலையில் கீழ்மலை, மேல்மலையில் கட்சியில் இணக்கம் இல்லாதவர்களை தலைமை நியமித்தது. அதிருப்தி அடைந்த தொண்டர்கள் சமீபத்தில் பா.ஜ., வில் சேர்ந்தனர்.
இதற்கிடையில் தி.மு.க., கூட்டணியில் உள்ள காங்., முக்கிய நிர்வாகியும் பா.ஜ., வில் சேர்ந்தார். இதனால் தி.மு.க., தொண்டர்களும் கூடாரத்தை காலி செய்து வருகின்றனர். திராவிட கட்சியின் கோட்டையாக இருந்த மலைப்பகுதியில் தற்போது பா.ஜ., வுக்கு சாதகமான சூழல் நிலவுகிறது. பா.ஜ.,வினரும் மலைப்பகுதியில் தேர்தல் அறுவடைக்கு களத்தை பலப்படுத்தி வருகிறது. இதனால் திராவிட கட்சிகளின் பலம் மலைப்பகுதியில் சரிவடைந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE