பண்ணைக்காடு : தாண்டிக்குடி கீழ்மலையில் துணை மின் நிலையம் அமைக்கும் பணி கிடப்பில் உள்ளது.
கொடைக்கானல் துணை மின் நிலையம் மூலம் தாண்டிக்குடி, பண்ணைக்காடு, கீழ்மலைப்பகுதிகளுக்கு மின் வினியோகம் நடக்கிறது. அடர்ந்த வனப்பகுதியில் மின் பாதை உள்ளதால் அடிக்கடி மரங்கள் விழுந்து மின்தடை ஏற்படுகிறது. இதை தவிர்க்க, சில ஆண்டுகளுக்கு முன் பண்ணைக்காடு ஊத்தில் துணை மின் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.வருவாய்த்துறை, ஒன்றிய நிர்வாகம் இடம் வழங்குவதில் ஏற்பட்ட சர்ச்சையால் திட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில் வாழைகிரி, கொடலங்காடு, தாண்டிக்குடியில் மின் நிலையம் அமைக்க இடம் தேர்வு நடந்தது. அதன் பின் திட்டத்திற்கான நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்கவில்லை. கிடப்பில் உள்ள துணை மின் நிலையம் திட்டம் மீண்டும் எப்போது துவங்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE