வடமதுரை: 'விவசாயிகள் மண்ணின் தன்மைகேற்ப பயிர் சாகுபடி செய்தால் அதிக மகசூல் பெறலாம்' என, வேளாண் உதவி இயக்குனர் பாண்டியன் தெரிவித்தார்.
அவர் தெரிவித்தது: மண் பரிசோதனை நிலையங்களில் மண், பாசன நீர் மாதிரிகள் ஆய்வு செய்து அதன் தன்மைகேற்ப பயிர் சாகுபடிக்கு பரிந்துரைக்கப்படும். கார அமிலத்தன்மை 8.5 க்கு அதிகமானால் கார மண்ணாகும். சுண்ணாம்பு மிகுந்த மண்களில் கார அமிலத்தன்மை 8 முதல் 8.5 வரை இருக்கும்.அதிக உப்பைத் தாங்கும் பருத்தி, ராகி, பீட்ரூட், குதிரை மசால், பெர்முடா புல், நடுத்தர அளவு உப்பைத் தாங்கும் தக்காளி, நெல், பரங்கிக்காய், மக்காச்சோளம், சூரியகாந்தி பயிரிடலாம். குறைந்த அளவு உப்பைத் தாங்கும் அவரை, முள்ளங்கி, ஆரஞ்சு, எலுமிச்சை பயிரிடலாம். சரளை மண்ணில் செம்மண், மணல், மட்கிய எருவைக் கலந்து இட்டு புளி, வேம்பு, புங்கம் மரம் நட்டு வளர்க்கலாம் என, தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE