நவ., 16, 1985
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள செங்குட்டைப்பாளையம் கிராமத்தில், 1898 மார்ச், 11ல் பிறந்தவர், சுவாமி சித்பவானந்தர். இயற்பெயர், சின்னு.-
சென்னை மாநிலக் கல்லுாரியில் கணிதம், அறிவியல், தத்துவம் பயின்றார். மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்துக்குச் சென்று வந்தவருக்கு, துறவறத்தில் நாட்டம் பிறந்தது. ஊட்டி ராமகிருஷ்ண மடத்தில், சுவாமி சிவானந்தர், இவருக்கு சன்னியாச தீட்சை அளித்து, 'சுவாமி சித்பவானந்தர்' என, பெயர் சூட்டினார்.யோகம், தியானம், சாஸ்திரம், உபநிடதம், கீதை மற்றும் பல மொழிகள் கற்றார்.
நாடு முழுதும் யாத்திரை மேற்கொண்டார். உதகை ராமகிருஷ்ண மடத்தின் தலைவராக, 1930 முதல், 1940 வரை இருந்தார். ஏராளமான கல்வி நிறுவனங்களைத் துவக்கினார். 130க்கும் மேற்பட்ட நுால்கள் எழுதியுள்ளார். 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார். 1985 நவ., 16ல், தன், 87-வது வயதில் மகாசமாதி அடைந்தார்.சுவாமி சித்பவானந்தர் காலமான தினம் இன்று!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE