டிரம்ப் ஆதரவாளர் பேரணியில் வன்முறை: கத்திக்குத்து, தீ வைப்பால் பதற்றம்

Updated : நவ 16, 2020 | Added : நவ 16, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
வாஷிங்டன் : அமெரிக்காவில் அதிபர் டொனால்டு டிரம்பின் குடியரசு கட்சியைச் சேர்ந்த ஆதரவாளர்கள் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது. இதில் சிலர் காயமடைந்தனர்.அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் முடிந்து ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பிடன் வென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தேர்தல் முடிவுகளை ஏற்க அதிபர் டொனால்டு டிரம்ப் மறுத்து வருகிறார். தேர்தல் நடைமுறையில் மோசடி
US, Donald Trump,Trump,டிரம்ப்,டோனால்ட் டிரம்ப்

வாஷிங்டன் : அமெரிக்காவில் அதிபர் டொனால்டு டிரம்பின் குடியரசு கட்சியைச் சேர்ந்த ஆதரவாளர்கள் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது. இதில் சிலர் காயமடைந்தனர்.

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் முடிந்து ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பிடன் வென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தேர்தல் முடிவுகளை ஏற்க அதிபர் டொனால்டு டிரம்ப் மறுத்து வருகிறார். தேர்தல் நடைமுறையில் மோசடி நடந்ததாக அவர் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்.


மோதல்


இந்நிலையில் டிரம்பின் ஆதரவாளர்கள் வாஷிங்டனில் நேற்று முன்தினம் பேரணி நடத்தினர். பேரணி அமைதியாக நடந்து கொண்டு இருந்தது. டிரம்புக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினர். வெள்ளை மாளிகை அருகே மாலையில் பேரணி கடந்தபோது அந்த பகுதியில் இனவெறிக்கு எதிராக சிலர் பேரணி நடத்தினர். அவர்களுக்கும் டிரம்ப் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

டிரம்ப் ஆதரவாளர்கள் ஏந்தி வந்த பதாகைகள் அணிந்திருந்த தொப்பி உள்ளிட்டவற்றை எதிர் கோஷ்டினர் பறித்து தீவைத்து எரித்தனர். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அது வன்முறையாக மாறியது.


latest tamil news



கண்டனம்


கம்பு உள்ளிட்டவற்றால் ஒருவரை ஒருவரை தாக்கினர். போலீசார் உடனடியாக விரைந்து மோதலை தடுத்தனர்.இந்த வன்முறையில் இனவெறிக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களில் ஒருவருக்கு முதுகில் கத்திக்குத்து விழுந்ததாக கூறப்படுகிறது. இதைத் தவிர சில போலீசாரும் காயமடைந்தனர். இதனால் அந்தப் பகுதியில் நீண்ட நேரம் பதற்றம் நிலவியது.

இந்த தாக்குதலுக்கு அதிபர் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலை தளங்களில் அவர் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
16-நவ-202013:28:52 IST Report Abuse
A.George Alphonse இதுபோன்ற கத்திக்குத்து, தீவைப்பு, நேருக்கு நேர் மோதல் எல்லாமே உலகளவில் நார்மல் தான். நமது நாடுதான் மிகவும் சாந்தமான நாடு.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
16-நவ-202007:11:02 IST Report Abuse
Lion Drsekar அங்கும் நம்மவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள், பாராட்டுக்கள், வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X