புதுடில்லி: டில்லியில், தடையை மீறி, தீபாவளியன்று மக்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாடியதால், நேற்று, காற்றின் தரம், மிகவும் மோசமாக பதிவானது.

டில்லியில், கடந்த சில வாரங்களாக, காற்றின் தரம், மிகவும் மோசமாக பதிவாகி வருகிறது. இதை கட்டுப்படுத்த, மாநில அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இதற்கிடையே, டில்லியில் காற்று மாசுபடுவதை கட்டுப்படுத்தும் விதமாக, தீபாவளி பண்டியின்போது, பட்டாசுகளை வெடிக்க, தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்து உத்தரவிட்டது. அந்த தடை, வரும், 30ம் தேதி வரை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அந்த உத்தரவை சிறிதும் பொருட்படுத்தாமல், டில்லி மக்கள், தீபாவளியன்று பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடினர். இதன் விளைவாக, நேற்று காலை, காற்றின் தரம் மிகவும் மோசமடைந்தது.அதன்படி, நேற்று காலை, 7:00 மணிக்கு, காற்றின் தர குறியீடு, 468 ஆக பதிவானது. சராசரியாக, இந்த குறியீட்டு அளவு, 100க்கும் கீழ் பதிவாக வேண்டும்.

இதனால், டில்லியின் பெரும்பாலான பகுதிகளில், புகை சூழ்ந்து காணப்பட்டது. வாகன ஓட்டிகள், பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.தடையை மீறி பட்டாசு வெடித்த, 10 பேரை, போலீசார் கைது செய்தனர். மேலும், பட்டாசுகளை விற்பனை செய்த, 12 பேர் மீது, வழக்குப்பதிவு செய்யப்பட்டுஉள்ளது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE