திண்டிவனம் : திண்டிவனம் மேம்பாலத்தின் மேல், பொது மக்கள் பயன்படுத்தும் நடை பாதை, நெடுஞ்சாலைத்துறை மூலம் சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திண்டிவனம் மேம்பாலத்தின் மேல்பகுதியிலிருந்து, கீழே உள்ள பகுதிக்கு பொது மக்கள், பயணிகள் இறங்கி வருவதற்காக தனியாக படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.இந்த படிக்கட்டுகள் அமைந்துள்ள பகுதிக்கு வருவதற்காக, மேம்பாலத்தின் மேல்பகுதியில் இரண்டு பக்கமும், சிமென்ட் சிலாப்புகள் போட்டு நடை பாதை அமைக்கப்பட்டுள்ளது.நடைபாதையின் சிமென்ட் சிலாப்புகள் பல இடங்களில் பெயர்ந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் தவறி கீழே விழுந்து வந்தனர். பொது மக்களின் நலன் கருதி, திண்டிவனம் நெடுஞ்சாலைத் துறையினர், மேம்பாலத்தின் மேல்பகுதியிலுள்ள நடைபாதையில் சிமென்ட் தரை அமைத்து சீரமைக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE