பொது செய்தி

இந்தியா

சுற்றுலா தலங்கள் திறப்பு? மஹாராஷ்டிரா அரசு தயக்கம்

Added : நவ 16, 2020
Share
Advertisement
மும்பை: ''மஹாராஷ்டிராவில், சுற்றுலா தலங்களை திறப்பது பற்றி, எந்த முடிவும் எடுக்கவில்லை,'' என, மாநில சுற்றுலாத்துறை இணை அமைச்சர் அதிதி தட்காரே கூறினார்.மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.கொரோனா பரவல் காரணமாக, ஏழு மாதங்களுக்கு மேலாக, வழிபாட்டு தலங்கள், சுற்றுலா தலங்கள், வரலாற்று நினைவுச்

மும்பை: ''மஹாராஷ்டிராவில், சுற்றுலா தலங்களை திறப்பது பற்றி, எந்த முடிவும் எடுக்கவில்லை,'' என, மாநில சுற்றுலாத்துறை இணை அமைச்சர் அதிதி தட்காரே கூறினார்.

மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.கொரோனா பரவல் காரணமாக, ஏழு மாதங்களுக்கு மேலாக, வழிபாட்டு தலங்கள், சுற்றுலா தலங்கள், வரலாற்று நினைவுச் சின்னங்கள் மூடப்பட்டுள்ளன. கொரோனா பரவல் குறைந்துள்ளதையடுத்து, வழிபாட்டு தலங்களை மட்டும், இன்று முதல் திறக்க, முதல்வர் உத்தவ் தாக்கரே அனுமதியளித்துள்ளார். வரலாற்று நினைவிடங்கள், சுற்றுலா தலங்களில் வழிகாட்டிகளாக, பலர் வேலை செய்து வருகின்றனர்.ஏழு மாதங்களாக வேலையின்றி, இவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, 'சுற்றுலா தலங்கள், வரலாற்று நினைவிடங்களை திறக்க வேண்டும்' என, முதல்வர் உத்தவுக்கு, அவுரங்காபாத் மாவட்டத்தைச் சேர்ந்த, சுற்றுலா வழிகாட்டிகள் சங்கத்தின் கடிதம் எழுதியுள்ளனர்.இந்நிலையில், மாநில சுற்றுலாத்துறை இணை அமைச்சர் தட்காரே கூறுகையில், ''சுற்றுலா தலங்கள், வரலாற்று நினைவிடங்கள் ஆகியவற்றை திறப்பது பற்றி, எந்த முடிவும் எடுக்கவில்லை. இது பற்றி, முதல்வர் தான் முடிவு செய்வார்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X