திருவனந்தபுரம்: கேரளாவில், அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும், குழந்தைகள் நல மையம் துவக்கப்பட உள்ளதாக, அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர். கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
மாநிலத்தில், 15 போலீஸ் ஸ்டேஷன்களில், குழந்தைகள் நல மையத்தை, டி.ஜி.பி., பிஹிரா, நேற்று, 'வீடியோ கான்பரன்சிங்' வழியாக துவக்கி வைத்தார். அப்போது, அவர் கூறியதாவது:குழந்தைகளின் நண்பனாக செயல்பட, போலீசாருக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. குழந்தைகள், தாங்கள் சந்திக்கும் பிரச்னைகள் பற்றி, தைரியமாக புகார் அளிக்க வசதியாக, போலீஸ் ஸ்டேஷன்களில், குழந்தைகள் நல மையம் துவக்க முடிவு செய்யப்பட்டது.
தற்போது மாநிலத்தில், 85 போலீஸ் ஸ்டேஷன்களின், இந்த மையம் திறக்கப்பட்டுள்ளது. இன்னும் மூன்று மாதத்தில், மேலும், 12 போலீஸ் ஸ்டேஷன்களில் திறக்கப்பட உள்ளது.அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும், குழந்தைகள் நல மையங்கள் அமைக்க, நடவடிக்கை எடுககப்பட்டுள்ளது.போலீஸ் என்றால், குழந்தைகள் பயப்படாமல், நண்பனாக பார்க்க வேண்டும் என்ற நோக்கில், இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE