திண்டிவனம் : திண்டிவனம் நகராட்சி சுடுகாட்டில், 'ஓம் சாந்தி ஸ்தலம்' அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகின்றது.
திண்டிவனம் நகராட்சி சார்பில், 55 லட்சம் ரூபாய் செலவில் சலவாதி ரோட்டிலுள்ள சுடுகாட்டில், நவீன எரிவாயு தகன மேடை, திறக்கப்பட்டு, செயல்பாட்டில் இருந்து வருகின்றது. இதில் விறகு கட்டைகளை கொண்டு, தீ மூட்டி அதிலிருந்து கிடைக்கும் எரிபொருள் மூலம் இறந்தவர்களின் உடலை தகனம் செய்யப்பட்டது. இந்த நடைமுறையில் எரிப்பதற்கு நேரம் அதிகமாகும்.விழுப்புரம் உள்ளிட்ட மற்ற இடங்களில் உள்ள சுடுகாட்டில், நவீன முறையில் கேஸ் சிலிண்டர் மூலம் விரைவில் இறந்தவர்களின் உடல்கள் எரிக்கப்படுகின்றது.
இதேபோல், திண்டிவனத்திலுள்ள பழைய முறையில் இருப்பதை மாற்றிவிட்டு, காலத்திற்கேற்ப எல்.பி.ஜி., சிலிண்டர் இணைப்பை பொருத்தி உடல்களை எரிப்பதற்கு நகராட்சி சார்பில் ரூ.9 லட்சம் செலவில், ஏற்கனவே உள்ள எரிவாயு தகன மேடைக்கு பதிலாக, எல்.பி.ஜி., கேஸ் முறையில், தற்போது உடல்கள் எரிக்கப்படுகின்றது.அமைச்சர் சண்முகம் ஏற்பாட்டின் படி, விழுப்புரம் கே.கே.ரோடு சுடுகாட்டில் அமைக்கப்பட்டுள்ளது முக்தி மயானம் போல அமைப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.திண்டிவனத்திலுள்ள நகராட்சி சுடுகாட்டில், எரியூட்டும் இடத்திற்கு அருகில் போர்ட்டிக்கோ அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல், சுடுகாட்டு வளாகத்தில் நவீன வசதிகளுடன் கழிப்பறை கட்டப்பட்டுள்ளது.
சுடுகாட்டு வளாகத்தில் ரூ.7 லட்சத் திற்கு மரக்கன்றுகள், ஈச்சங்கன்றுகள், பூச்செடிகள் உள்ளிட்டவைகள் வாங்கப்பட்டு, நட்டு வைக்கப்பட்டுள்ளது.வளாகத்தின் நுழை வாயில் பகுதியில் ஆர்ச் அமைக்கும் பணி மற்றும் சுடுகாட்டுற்கு செல்லும் பாதையில் பிளேவர் பிளாக் கற்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகின்றது.திண்டிவனம் நகராட்சி சுடுகாட்டில் 'ஓம் சாந்தி ஸ்தலம்' அமைப்பதற்காக ரூ.60 லட்சம் செலவில் நடைபெற்று வரும் பூங்கா அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் வரும் டிசம்பர் மாதத்திற்குள் முடிவடைந்துவிடும் என்று பணிகளை மேற்கொண்டுள்ள அமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE