சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நெற்பயிரில் நோய் தாக்குதல் கம்மாபுரம் விவசாயிகள் கவலை

Added : நவ 16, 2020
Share
Advertisement
கம்மாபுரம் : கம்மாபுரம், ஸ்ரீமுஷ்ணம் பகுதியில், சம்பா சாகுபடி செய்துள்ள நெற்பயிரில், நோய் தாக்குவதால், மகசூல் குறையுமென விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியம், காவனூர், மருங்கூர், தேவங்குடி, கார்மாங்குடி, க.தொழூர், கீழப்பாலையூர் மற்றும் கம்மாபுரம் ஒன்றியம் கோபாலபுரம், வி.குமாரமங்கலம், சிறுவரப்பூர், வி.சாத்தப்பாடி, தர்மநல்லுார், கம்மாபுரம் உட்பட

கம்மாபுரம் : கம்மாபுரம், ஸ்ரீமுஷ்ணம் பகுதியில், சம்பா சாகுபடி செய்துள்ள நெற்பயிரில், நோய் தாக்குவதால், மகசூல் குறையுமென விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியம், காவனூர், மருங்கூர், தேவங்குடி, கார்மாங்குடி, க.தொழூர், கீழப்பாலையூர் மற்றும் கம்மாபுரம் ஒன்றியம் கோபாலபுரம், வி.குமாரமங்கலம், சிறுவரப்பூர், வி.சாத்தப்பாடி, தர்மநல்லுார், கம்மாபுரம் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் 19 ஆயிரம் ஏக்கர் பரப்பில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.கோ.ஆர்-50, கோ-49, பொண்மணி, கோ-43, பி.பி.டி-5402, சொர்ணாசப்-1, உள்ளிட்ட பல ரகங்களை விசாயிகள் பயிர் செய்துள்ளனர்.

இதில், பி.பி.டி., ரகத்தை பயிர் செய்தால், அறுவடை செய்யும் போது விளை நிலத்திலேயே வியாபாரிகள் அதிக விலைக்கு கொள்முதல் செய்வர் என்ற ஆர்வத்தில், அதிக பரப்பளவில் சாகுபடி செய்துள்ளனர்.இந்நிலையில், நெற்பயிரில் மர்ம நோய்கள் தாக்கியதால், விவசாயிகள் பூச்சி மருந்துகளை தெளித்தும், அதனை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால், மகசூல் பாதிப்பு ஏற்படும் என, கம்மாபுரம், ஸ்ரீமுஷ்ணம் பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X