சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அதிரடி! தீபாவளியன்று மாவட்டம் முழுவதும் போலீசார்...பல்வேறு குற்றங்களில் 1,490 பேர் மீது வழக்கு

Added : நவ 16, 2020
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் தீபாவளியன்று போலீசார் நடத்திய அதிரடி சோதனையின்போது, போக்குவரத்து விதிமீறியதாக 631 பேர் மீதும், மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்ட 358 பேர் உட்பட மொத்தம் 1,490 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில், மணல் கடத்தல், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனை, மதுபானங்களை

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் தீபாவளியன்று போலீசார் நடத்திய அதிரடி சோதனையின்போது, போக்குவரத்து விதிமீறியதாக 631 பேர் மீதும், மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்ட 358 பேர் உட்பட மொத்தம் 1,490 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில், மணல் கடத்தல், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனை, மதுபானங்களை கடத்துதல், விற்பனை செய்தல் உள்ளிட்ட மதுவிலக்கு குற்றங்கள் மற்றும் சூதாட்டம் போன்ற சட்ட விரோத செயல்களை கட்டுப்படுத்தும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.இதற்காக, எஸ்.பி., ராதாகிருஷ்ணன் தலைமையில் தனிப்படைகள் அமைத்து மாவட்டத்தில் தினந்தோறும் பல்வேறு இடங்களில் போலீசார் ரெய்டில் ஈடுபடுகின்றனர்.

அதன்படி, தீபாவளி பண்டிகையன்று, மாவட்டம் முழுவதும் போலீசார் வாகன சோதனை மற்றும் சட்டவிரோத செயல்கள் குறித்த சோதனையில் ஈடுபட்டனர்.இதில், மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 208 நபர்கள் கைது செய்யபட்டனர். அவர்களிடமிருந்து 41 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 31 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.இதேபோன்று, மதுவிலக்கு வேட்டையில், 358 நபர்கள் மீது மதுவிலக்கு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து 650 லிட்டர் புதுச்சேரி மாநில சாராயமும், 400 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.வீரபாண்டி கிராமத்தில் சாராயம் காய்ச்ச தயார் செய்து வைக்கப்பட்டிருந்த 900 லிட்டர் சாராய ஊரல்கள் கொட்டி அழிக்கப்பட்டது.இதேபோன்று, மாவட்டம் முழுவதும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, குடிபோதை, அதிவேகம், அதிகபாரம், லைசென்ஸ் மற்றும் ெஹல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டியது உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறை மீறியதாக 631 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 262 பேர் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டத்தில் தீபாவளியன்று போலீசார் நடத்திய சோதனையில், பல்வேறு குற்றங்களில் மொத்தம் 1,490 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள் ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X