சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆரோவில்-பொம்மையார்பாளையம் சாலை சேதம்

Added : நவ 16, 2020
Share
Advertisement
திண்டிவனம : பொம்மையார்பாளையத்தில் இருந்து ஆரோவில் செல்லும் சாலை படுமோசமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிடைந்து வருகின்றனர். பொமையார்பாளையத்திலிருந்து ஆரோவில் செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ளது. இங்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.ஆரோவில் பகுதிக்கு செல்வதற்கு நான்கு புறமும் சாலை அமைந்துள்ளது. இதில் இ.சி.ஆர். சாலையில்இருந்து பொம்மையார்பாளையம் அடுத்த

திண்டிவனம : பொம்மையார்பாளையத்தில் இருந்து ஆரோவில் செல்லும் சாலை படுமோசமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிடைந்து வருகின்றனர்.

பொமையார்பாளையத்திலிருந்து ஆரோவில் செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ளது. இங்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.ஆரோவில் பகுதிக்கு செல்வதற்கு நான்கு புறமும் சாலை அமைந்துள்ளது. இதில் இ.சி.ஆர். சாலையில்இருந்து பொம்மையார்பாளையம் அடுத்த கரிக்கன் தோப்பு சாலை வழியாக ஆரோவில் பகுதிக்கு செல்லும் சாலை உள்ளது.இந்த சாலை வழியாக சுலபமாக 'மாத்திரி மந்திர்' சென்றுவிடலாம் என்பதால், சுற்றுலாப்பயணிகள் அதிக அளவில் பயன்படுத்து கின்றனர். முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் தனியார் விடுதிகள், தனியார் கல்லூரி, ஆரோவில் பள்ளி உட்பட முக்கிய நிறுவனங்கள் அமைந்துள்ளது.

மேலும் பொம்மையார்பாளையம், பிள்ளைச்சாவடி, காலாப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆரோவில் பகுதிக்கு வேலைக்கு செல்லும் பொது மக்களும் இந்த சாலையை தான் பயன்படுத்தி வருகின்றனர்.கடந்த பல நாட்களாக சாலை சேதமடைந்து குண்டும் குழியமாக காணப்படுவதால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே இந்த சாலையை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X