கடலுார், : சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் கடலுாரில் அய்யப்ப மாலை விற்பனை மந்தமாக உள்ளது.
கார்த்திகை மாதத்தின் முதல் நாளான இன்று முதல் கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்ல பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் கடைபிடிக்க உள்ளனர். இதனையொட்டி கடலுார் திருப்பாதிரிப்புலியூர், மஞ்சக்குப்பம் உட்பட பல்வேறு இடங்களில் உள்ள கடைகளில் அய்யப்ப மாலை, காவி வேட்டி, பூஜைப் பொருட்கள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளது.மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடை இன்று முதல் திறக்கப்படுகிறது.
இந்நிலையில், கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வைரஸ் பாதிப்பு இல்லை என்பதற்கான சான்றிதழை காண்பித்தால் மட்டுமே கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதி்க்கப் படுவார்கள்.கடும் கட்டுப்பாடுகள் காரணமாக கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை வழக்கத்தை விட குறைவாகவே இருக்கும்.இதன் காரணமாக கடலுாரில் அய்யப்ப மாலை, காவி வேட்டிகள், பூஜைப் பொருட்கள் விற்பனை மந்தமாக உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE