பொது செய்தி

தமிழ்நாடு

மரக்கன்று, பனை விதை நடும்

Added : நவ 16, 2020
Share
Advertisement
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே பசுமை கிராம குழு சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லுார் பகுதியில் உள்ள இளைஞர்கள் சேர்ந்து திருவெண்ணெய்நல்லுார் பகுதியில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக பசுமை கிராம குழு என்ற தலைப்பில் குழுக்கள் துவங்கப்பட்டு கடந்த நான்கு ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றனர். இக்குழு

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே பசுமை கிராம குழு சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லுார் பகுதியில் உள்ள இளைஞர்கள் சேர்ந்து திருவெண்ணெய்நல்லுார் பகுதியில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக பசுமை கிராம குழு என்ற தலைப்பில் குழுக்கள் துவங்கப்பட்டு கடந்த நான்கு ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றனர். இக்குழு இந்தாண்டு மட்டும் திருவெண்ணெய்நல்லுார், திருமுண்டீச்சரம் கிராமம், சரவணம்பாக்கம், அரும்பட்டு, மாதம்பட்டு, தடுதாட்கொண்டூர், மடப்பட்டு, கருவேப்பிளைபாளையம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று பசுமை கிராம குழு இளைஞர்கள் பனை விதைகள் மற்றும் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர்.

திருவெண்ணெய்நல்லுார் பகுதியில் இதுவரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பனை விதைகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுள்ளனர். இதேபோல் பத்தாவது வாரத்தை யொட்டி நேற்று திருவெண்ணெய்நல்லுார் அடுத்த அரும்பட்டு கிராமத்தில் 500 பனை விதைகள் மற்றும் மரக்கன்றுகள் நட்டுள்ளனர்.கிராம குழு ஒருங்கினைப்பாளர்கள் மணிகண்டன், செந்தில், அன்பரசன், அய்யப்பன், பாலுபாஸ்கர், அசோக், பசுமை ஆர்வலர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டனர். இப்பணியை பெரியவர்கள், போலீசார், அரசு அதிகாரிகள் என அனைவரின் பாராட்டை பெற்று வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X