சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கூனிச்சம்பட்டு சாலை சேதம் வாகன ஓட்டிகள் கடும் அவதி

Added : நவ 16, 2020
Share
Advertisement
திருக்கனுார் : கூனிச்சம்பட்டு- மணலிப்பட்டு சாலை சேதமடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். திருக்கனுார் அடுத்த கூனிச்சம்பட்டு சாலை வழியாக மணலிப்பட்டு மற்றும் தமிழகப் பகுதியான ஐவேலி, பொம்பூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.இச்சாலை பொதுப்பணித்துறை அதிகாரிகளின் போதிய பராமரிப்பு இல்லாததால், தற்போது மிகவும்

திருக்கனுார் : கூனிச்சம்பட்டு- மணலிப்பட்டு சாலை சேதமடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

திருக்கனுார் அடுத்த கூனிச்சம்பட்டு சாலை வழியாக மணலிப்பட்டு மற்றும் தமிழகப் பகுதியான ஐவேலி, பொம்பூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.இச்சாலை பொதுப்பணித்துறை அதிகாரிகளின் போதிய பராமரிப்பு இல்லாததால், தற்போது மிகவும் சேதமடைந்து ஜல்லிகள் பெயர்ந்து, மெகா பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக, இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருவதுடன், அவ்வப்போது விபத்துகளிலும் சிக்குகின்றனர்.

எனவே, சேதமடைந்துள்ள கூனிச்சம்பட்டு- மணலிப்பட்டு செல்லும் சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X