காரைக்கால் : காரைக்கால் பார்வதீஸ்வரர் கோவிலில் நேற்று கடைமுக தீர்த்தவாரி உற்சவம் நடந்தது.
நிகழ்ச்சியை முன்னிட்டு அதிகாலை ஆலயத்தில் பார்வதீஸ்வரக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாரதனை நடைபெற்றது. பின்னர் உற்சவர் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக மதகடி அரசலாற்றுக்கு சென்று, அங்கு தென்கரையில் நீராடும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் கோவில் உபயதாரர் இளங்கோவன்(எ) சோமு மற்றும் கோவில் நிர்வாகத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement