திண்டிவனம் : திண்டிவனம் உழவர் சந்தையில் சர்க்கரை நோய் கண்டறியும் முகாம் நடந்தது.
உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு, திண்டிவனம் சர்வீஸ் லயன்ஸ் சங்கம், லயன்ஸ் சர்வீஸ் டிரஸ்ட் சார்பில் உழவர் சந்தையில் நடந்த முகாமிற்கு, சங்கத்தின் தலைவர் கஸ்துாரிரங்கன் தலைமை தாங்கினார். சர்வீஸ் டிரஸ்ட் ஆனந்த், முத்துராஜ்குமார், ஆனந்தகுமார், பாரிநாதன், உழவர்சந்தை அதிகாரி சத்யா முன்னிலை வகித்தனர்.வேளாண் உதவி இயக்குநர் சரவணன் முகாமை துவக்கி வைத்தார். முகாமில், 300 பேர்களுக்கு சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து பொது மக்களுக்கு நீரிழிவு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.முகாமில், சங்க நிர்வாகிகள் குமார், கண்ணன், நுாருல்லா, கமலக்கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE