புதுச்சேரி : மங்கலம் தொகுதி எம்.எல்.ஏ.,சட்டசபைக்கு செல்வதே இல்லை என தி.மு.க., குற்றம் சாட்டியுள்ளது.
தி.மு.க., தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., நேற்று மங்கலம் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது நிர்வாகிகளுடன் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கூட்டத்தில், மாநில பொருளாளர் குமாரவேல் பேசியதாவது:மங்கலம் தொகுதியில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ., இருக்கின்றாரா? இல்லையா? என்ற நிலைதான் உள்ளது. ஏனென்றால் தொகுதிப்பக்கமே எட்டிப்பார்ப்பது இல்லை.
குறிப்பாக சட்டசபைக்கு செல்வதே இல்லை. இதனால் சட்டசபையில் தொகுதி மக்களுக்கும், தொகுதி வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்களை அரசுக்கு எடுத்துக் கூறி பெற்றுத் தருவதற்கு ஆட்கள் இல்லாத நிலையே உள்ளது. தி.மு.க., மட்டுமே மங்கலம் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களுக்கு தேவையானவைகளை செய்து கொடுத்து வருகிறது. எனவே வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.,விற்கு மங்கலம் தொகுதியில் வெற்றி பெற நல்ல வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் தொகுதி செயலர்கள் சாரங்கன், ராமசாமி, சக்திவேல், நடராஜன், விவசாய தொழிலாளர் அணி செல்வநாதன், வர்த்தக அணி சக்திவேல், மாநில தொண்டரணி துணை அமைப்பாளர் முரளி, இளைஞரணி துணை அமைப்பாளர் மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE