மனைவியின் ஸ்கூட்டி எரிப்பு: கணவருக்கு போலீஸ் வலை

Added : நவ 16, 2020
Share
Advertisement
புதுச்சேரி : மனைவியை மிரட்ட, மூன்று மோட்டார் சைக்கிள்களை எரித்த கணவரை போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சேரி உருளையன்பேட்டை, தென்னஞ்சாலை ரோடு, சஞ்சய் காந்தி நகர், டாக்டர் காலனி அருகில் அன்பகம் அப்பார்மெண்ட் உள்ளது.அப்பார்மெண்ட் கீழ் தள வாகன நிறுத்தும் இடத்தில், நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டி, பைக் மற்றும் ஸ்கூட்டர் நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென தீ பிடித்து

புதுச்சேரி : மனைவியை மிரட்ட, மூன்று மோட்டார் சைக்கிள்களை எரித்த கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி உருளையன்பேட்டை, தென்னஞ்சாலை ரோடு, சஞ்சய் காந்தி நகர், டாக்டர் காலனி அருகில் அன்பகம் அப்பார்மெண்ட் உள்ளது.அப்பார்மெண்ட் கீழ் தள வாகன நிறுத்தும் இடத்தில், நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டி, பைக் மற்றும் ஸ்கூட்டர் நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென தீ பிடித்து எரிந்தது.சத்தம் கேட்டு ஓடிவந்த குடியிருப்பு வாசிகள் தீயை அணைக்க போராடினர். தகவலறிந்த புதுச்சேரி தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும், மூன்று மோட்டார் சைக்கிள்களும் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தன.

தகவலறிந்த உருளையன்பேட்டை போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு, அங்கிருந்த சி.சி.டி.வி., பதிவுகளை பார்வையிட்டனர்.அப்பார்ட்மெண்ட் சுவர் ஏறி குதிக்கும் மர்ம நபர், கையில் எடுத்து வந்த பெட்ரோலை, ஸ்கூட்டி மீது ஊற்றி தீ வைத்து விட்டு, மீண்டும் மதில் ஏறி குறித்து தப்பித்து செல்வது பதிவாகி இருந்தது.விசாரணையில், அப்பார்ட்மெண்டில் வசிக்கும் சுஜாதாவிற்கும், அவரது கணவர் குமரேசனும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்வதும், அவர்களுக்குள் விவாகரத்து தொடர்பாக பிரச்னை உள்ளது.

அதனால், மனைவியை மிரட்ட அவரது ஸ்கூட்டியை பெட்ரோல் ஊற்றி எரித்ததும், அந்த தீ பரவி அருகில் இருந்த பைக் மற்றும் ஸ்கூட்டரும் எரிந்து சேதமானது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து, குமரேசனை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X