பொது செய்தி

தமிழ்நாடு

திருநாவலுார் அரசு மேல்நிலை பள்ளி

Added : நவ 16, 2020
Share
Advertisement
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில், பாதுகாப்பு வசதியில்லாததால் போதை ஆசாமிகள் மது அருந்தும் பாராக பயன்படுத்தி வரும் அவலநிலை தொடர்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலுாரில் அரசு மேல்நிலை பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். கொரோனா நோய் தாக்கம் சூழலை யொட்டி, கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில், பாதுகாப்பு வசதியில்லாததால் போதை ஆசாமிகள் மது அருந்தும் பாராக பயன்படுத்தி வரும் அவலநிலை தொடர்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலுாரில் அரசு மேல்நிலை பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். கொரோனா நோய் தாக்கம் சூழலை யொட்டி, கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தற்போது பள்ளி வளாகத்தில் கட்டடப் பணி நடந்து வருகிறது. பள்ளிக்கு காவலாளியும் கிடையாது. இதனால் சமூக விரோதிகளின் கூடாராக மாறியுள்ளதுபள்ளி வளாகத்தில் மர்ம நபர்கள் பலர் மது அருந்திவிட்டு, பாட்டில்களை அங்கேயே போட்டு சென்றுள்ளனர்.

அது மட்டுமின்றி, சிலர் பள்ளி வளாகங்களில் சூதாட்டம் போன்ற சட்டவிரோத செயல்களிலும் ஈடுபட்டுவருகின்றனர்.பள்ளிக்கு, ஆசிரியர்களும் சரிவர வராததால், மர்ம நபர்கள் போதையில் வகுப்பறைகளின் ஜன்னல் கதவுகளை உடைத்து சேதப்படுதியுள்ளனர். நேற்று முன்தினம் காலை முதல் மர்ம நபர்கள் பள்ளி வளாகத்தை மது அருந்தும் பாராக பயன்படுத்தியுள்ளனர். எனவே கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிக்கு போதிய பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கையை எடுக்க வேண்டும்.இது குறித்து உளுந்துார்பேட்டை மாவட்ட கல்வி அதிகாரி கூறியதாவது:திருநாவலுார் அரசு மேல்நிலை பள்ளியில் வாட்சுமேன் பணியிடம் காலியாகவுள்ளது குறித்து மேல் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம். விரைவில் வாட்சுமேன் அமர்த்தப்படுவர். வாட்சுமேன் போடும் வரை, அங்குள்ள ஆசிரியர்கள் மூலம் பள்ளிக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X