பாரிஸ்: பிரான்சில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலை யில், ரகசியமாக நடத்தப்படும், 'பார்ட்டி' எனப்படும் விருந்து நிகழ்ச்சிகளால், வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடான பிரான்சில், கடந்த, 24 மணி நேரத்தில், 32 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர். கட்டுப்பாடுஇதையடுத்து, நாட்டில் வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 19.54 லட்சமாக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை, 44 ஆயிரத்து, 246 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் பரவல் வேகமெடுத்துள்ளதால், நாட்டில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஊரடங்கை சிறிதும் பொருட்படுத்தாமல், தலைநகர் பாரிசில் உள்ள ஒரு வீட்டில், நேற்று முன்தினம் இரவு, ரகசியமாக, 'பார்ட்டி' நடந்தது. இதில், 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில், சுகாதார விதிமுறைகளும் மீறப்பட்டது தெரியவந்தது. இந்த பார்ட்டி, சமூக வலைதளத்தில், நேரலையில் ஒளிபரப்பானது.இதையடுத்து, தகவல்அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மீது, அங்கிருந்தோர், 'பாட்டில்' களை வீசி தாக்குதல் நடத்தினர். வேறு வழி இல்லாததால், கண்ணீர் புகை குண்டுகளை வீசி, அந்த கூட்டத்தை போலீசார் கலைத்தனர்.
அறிவுறுத்தல்
இந்நிலையில், அந்த பார்ட்டியில் பங்கேற்றஒரு வருக்கு, வைரஸ் இருப்பது நேற்று உறுதிபடுத்தப்பட்டது. இதையடுத்து, அந்த பார்ட்டியில் பங்கேற்ற அனைவரும், மருத்துவ பரிசோதனைகளை செய்துகொள்ளவும், வீட்டில் தனித்து இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி நடத்தப்படும், இதுபோன்ற ரகசிய பார்ட்டி களால், வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஜெர்மனி அரசின் விளம்பரம்ஐரோப்பிய நாடான ஜெர்மனியில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மக்கள் வீட்டில் தனித்திருக்க அறிவுறுத்தும் வகையில், ஜெர்மனி அரசு, 90 நொடிகள் ஓடும் ஒரு விளம்பரத்தை நேற்று வெளியிட்டது. கொரோனா காலத்தில், 22 வயது இளைஞர் ஒருவர், வீட்டில் தனித்து இருந்து, நாட்டிற்கு தான் அளித்த சேவை குறித்து, வயதான பின், அவர் கூறும் வகையில், இந்த விளம்பரம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு, நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE