பொது செய்தி

தமிழ்நாடு

பவுஞ்சிப்பட்டு வனக்காட்டு மாளிகையில்

Added : நவ 16, 2020
Share
Advertisement
மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள பவுஞ்சிப்பட்டு வனக்காட்டில் மர்மநபர்கள் அட்டகாசம் செய்துவருவதால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர். மூங்கில்துறைப்பட்டு அடுத்த பவுஞ்சிப்பட்டு வனக்காட்டில் வனக்காவலர் பயணியர் மாளிகை உள்ளது. தற்போது இந்த மாளிகை பயன்பாட்டில் இல்லாததால் அந்த மாளிகைக்கு தினமும் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் நடமாட்டம்

மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள பவுஞ்சிப்பட்டு வனக்காட்டில் மர்மநபர்கள் அட்டகாசம் செய்துவருவதால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

மூங்கில்துறைப்பட்டு அடுத்த பவுஞ்சிப்பட்டு வனக்காட்டில் வனக்காவலர் பயணியர் மாளிகை உள்ளது. தற்போது இந்த மாளிகை பயன்பாட்டில் இல்லாததால் அந்த மாளிகைக்கு தினமும் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. பகல் நேரங்களில் அந்த மாளிகை மது பிரியர்கள் பாராக மாற்றி வருகின்றனர்.சுற்றுலா மாளிகை சுற்றி விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். மர்ம நபர்கள் இரவு நேரங்களில் விவசாய நிலங்களில் புகுந்து விவசாயத்திற்கு பயன்படும் மண்வெட்டி, களை கொத்தி, கடப்பாறை உள்ளிட்ட பொருட்களை திருடி செல்கின்றனர்.

இதனால் விவசாயிகள் தவித்து வருகின்றனர். தீபாவளியன்று பத்துக்கும் மேற்பட்ட கும்பல் குடித்துவிட்டு தாக்கிகொண்டனர். தகவல் அறிந்த வடபொன்பரப்பி போலீசார் விரைந்து சென்றபோது அந்த கும்பல் விவசாயநிலங்களில் இறங்கி ஓடியதில் விவசாயபொருட்கள் சேதமாகியுள்ளது.எனவே விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி வனக்காட்டில் உள்ள பயன்பாடில்லாத மாளிகையை காவல் துறை சார்பில் கண்காணிக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X