டயர் வெடித்ததால் விபத்து கார் மோதி இருவர் படுகாயம்

Added : நவ 16, 2020
Share
Advertisement
திருபுவனை : டயர் வெடித்து தாறுமாறாக ஓடிய கார் மோதிய விபத்தில் இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். புதுச்சேரி, ரெட்டியார்பாளையம் புதுநகரைச் சேர்ந்தவர் விஜயரங்கன்,45; பல்பொருள் அங்காடி நடத்தி வருகிறார். இவர் நேற்று காலை விழுப்புரத்தில் இருந்து தனது குடும்பத்தினருடன் காரில், புதுச்சேரிக்கு சென்றுக் கொண்டிருந்தார். காரை விஜயரங்கன் ஓட்டினார்.திருபுவனை, மின்துறை அலுவலகம்

திருபுவனை : டயர் வெடித்து தாறுமாறாக ஓடிய கார் மோதிய விபத்தில் இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர்.

புதுச்சேரி, ரெட்டியார்பாளையம் புதுநகரைச் சேர்ந்தவர் விஜயரங்கன்,45; பல்பொருள் அங்காடி நடத்தி வருகிறார். இவர் நேற்று காலை விழுப்புரத்தில் இருந்து தனது குடும்பத்தினருடன் காரில், புதுச்சேரிக்கு சென்றுக் கொண்டிருந்தார். காரை விஜயரங்கன் ஓட்டினார்.திருபுவனை, மின்துறை அலுவலகம் அருகே சென்றபோது, காரின் முன்பக்க டயர் வெடித்தது. அதில், கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி எதிரில் வந்த பைக் மீது மோதிவிட்டு, சாலையோரம் நிறுத்தியிருந்த கார் மற்றும் பைக் மீது மோதி நின்றது.

இந்த விபத்தில், பைக்கில் வந்த வினாயகம்பட்டை சேர்ந்த டைல்ஸ் தொழிலாளிகளான செல்வதுரை 25; தயாநிதி 25; ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இருவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.விபத்து குறித்து வில்லியனுார் போக்குரவத்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X