சங்கராபுரம், : சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் பல ஆண்டுகளாக பூட்டிகிடக்கும் பிரேத பரிசோதனை அறை செயல்பட நடடிக்கை எடுக்க வேண்டும்.
சங்கராபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த 1996ம் ஆண்டு அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது.இந்த மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்தில் சந்தேக மரணம், விபத்தில் இறப்போர் உடல்கள் பரிசோதனை செய்யப்பட்டு வந்தது.கடந்த 2012ம் ஆண்டு முதல் இந்த அறை பூட்டி கிடக்கிறது. இதனால் சங்கராபுரம் பகுதியில் விபத்து மற்றும் சந்தேக மரணத்தில் இறப்பவர்களின் உடல்களை பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளது.
இதனால் பொது மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகின்றனர். சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் பூட்டிகிடக்கும் பிரேத பரிசோதனை அறை செயல்பட மாவட்ட கலெக்டர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE