காரைக்கால் : காரைக்காலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இரண்டு இடங்களில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ.25ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன.
காரைக்கால் தலத்தெரு பாரதியார் சாலையை சேர்ந்தவர் பாவடைசாமி. கூலி வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அவரது வீட்டின் அருகில் சிறுவர்கள் பட்டாசு வெடித்தனர். அதில் தீப்பொறி, பாவாடைசாமி வீட்டு கூரையில் பட்டு எரிந்தது.அதனைக் கண்ட அப்பகுதி மக்கள் தீயை அணைக்க முயன்றனர். அதற்குள் தகவலறிந்த தலத்தெரு மற்றும் சுரக்குடி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இருப்பினும், வீட்டில் ஒரு பகுதி எரிந்ததில் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.இதேப் ேபால், திருப்பட்டினம் வடக்கட்டளை பகுதியில் பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில், பாலச்சந்தர் என்பவரின் வீட்டின் கூரையில் மேல்பகுதி தீ பிடித்து எரிந்தது. உடன் அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்தனர். இருப்பினும், வீட்டில் வைத்திருந்த ரூ.5000 மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன.இந்த தீ விபத்துகள் குறித்து போலீசார் விசாரித்தல வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE