பொது செய்தி

தமிழ்நாடு

அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் மின்விளக்கு வசதி தேவை

Added : நவ 16, 2020
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் மின்விளக்கு அமைக்க அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரம் கிராமத்தில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ராஜராஜசோழன் மகன் ராஜேந்திர சோழன் கட்டிய அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. தமிழரின் கட்டட கலையினை பறைசாற்றும் விதமாக, கோவில் நுழைவு கோபுர வாயிலின்

கள்ளக்குறிச்சி : வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் மின்விளக்கு அமைக்க அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரம் கிராமத்தில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ராஜராஜசோழன் மகன் ராஜேந்திர சோழன் கட்டிய அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. தமிழரின் கட்டட கலையினை பறைசாற்றும் விதமாக, கோவில் நுழைவு கோபுர வாயிலின் மேற்புறத்தில் தாமரை வடிவிலான சிற்பம் உள்ளது. அதன் நடுவே உள்ள கல் சுழலும் வகையில் செதுக்கப்பட்டுள்ளது தனிசிறப்பாகும். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில் முறையான பராமரிப்பின்றி செடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடந்தது.கடந்த சில தினங்களுக்கு முன் இக்கோவிலை சுற்றி வளர்ந்திருந்த செடிகளை பொதுமக்கள் அகற்றினர்.

தொடர்ந்து சிவனடியார்கள் இக்கோவிலில் உழவாரபணி மேற்கொண்டனர். பொதுமக்கள் பலர் தினமும் வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சென்று சுவாமி வழிபாடு செய்து வருகின்றனர். விளக்கு பூஜை, பிரதோஷவழிபாடு ஆகிய நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறும் இக்கோவிலில் மின்விளக்குகள் கூட அமைக்கப்படவில்லை. இதனால் மாலைநேரத்தில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.எனவே, கோவிலை சுற்றி மின்விளக்குகள் அமைக்க அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X