பொது செய்தி

தமிழ்நாடு

தாழ்வான ஏரி தரைக்கோடியால் பவுஞ்சிப்பட்டில் தண்ணீர் வீண்

Added : நவ 16, 2020
Share
Advertisement
மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள பவுஞ்சிப்பட்டு ஏரியில் தரைக்கோடியின் உயரத்தை குறைத்ததால் தண்ணீர் வீனாகி வெளியேறுகிறது இதனால் விவசாயிகள் கவலையடைந்து வருகின்றனர்.மூங்கில்துறைப்பட்டு அடுத்த கல்வராயன் மலையில் பெய்து வரும் மழையால் தற்போது அப்பகுதியில் உள்ள ஏரிகள் நிரம்பி வருகிறது. இந்நிலையில் பவுஞ்சிப்பட்டு ஏரியும் நிரம்பி வருகிறது. இந்த

மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள பவுஞ்சிப்பட்டு ஏரியில் தரைக்கோடியின் உயரத்தை குறைத்ததால் தண்ணீர் வீனாகி வெளியேறுகிறது

இதனால் விவசாயிகள் கவலையடைந்து வருகின்றனர்.மூங்கில்துறைப்பட்டு அடுத்த கல்வராயன் மலையில் பெய்து வரும் மழையால் தற்போது அப்பகுதியில் உள்ள ஏரிகள் நிரம்பி வருகிறது. இந்நிலையில் பவுஞ்சிப்பட்டு ஏரியும் நிரம்பி வருகிறது. இந்த தண்ணீர் தற்போது வெளியேறி செல்கிறது. இந்த ஏரியில் தரைக்கோடி சில ஆண்டுகளுக்கு முன்பு பொதுபணித் துறை சார்பில் சீரமைக்கும் பணி நடந்தது.ஏரியில் இருபது ஏக்கர் அளவில் ஆக்கிரமிப்பு செய்து வருபவர்களிடம் கணிசமான தொகையை வாங்கிக் கொண்டு பொதுபணித்துறை அலுவலர்கள் தரை கோடியை குறைத்துள்ளனர்.

இதனால் ஏரியில் நிறையும் தண்ணீர் வெளியேறுகிறது. இந்த ஏரி நிரம்பினால் ஆறுமாதகாலத்திற்கு அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது ஏரியின் தரைகோடியின் அளவு குறைத்ததால் இரண்டு மாதங்களிலேயே தண்ணீர் வற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி தரைகோடியினை உயர்த்தி ஏரியில் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களை காலிசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X