திருக்கோவிலுார் : திருக்கோவிலூர், வீரட்டேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது.
திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், கந்தசஷ்டி விழா துவக்கத்தை முன்னிட்டு நேற்று கால 6:00 மணிக்கு மூல மூர்த்திகளுக்கு விசேஷ அபிஷேகம், அலங்காரம், 9:00 மணிக்கு முருகப்பெருமான் சன்னதியில் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம், கலச ஸ்தாபனம், பஞ்சாசன பூஜை, கடஸ்தாபனம், சத்ரு சம்ஹார திரிசதி ஹோமம், வள்ளி தேவசேனா முருகப் பெருமானுக்கு விசேஷ அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.மாலை 5:00 மணிக்கு ஸ்கந்த ஹோமம், மஹா பூர்ணாகுதி, சுவாமிக்கு லட்சார்ச்சனை நடந்தது.தொடர்ந்து 7 நாட்கள் நடக்கும் இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 20ம் தேதி கந்தசஷ்டி சூரசம்ஹாரம், மறுநாள் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE