பொது செய்தி

தமிழ்நாடு

காரணை நரிக்குறவருக்கு புது நீர்த்தேக்க தொட்டி

Added : நவ 16, 2020
Share
Advertisement
உத்திரமேரூர் : காரணை ஊராட்சி, நரிக்குறவர் குடியிருப்புக்கு, புதிய கிணறு மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணி நடந்து வருகிறது. உத்திரமேரூர் ஒன்றியம், காரணை ஊராட்சி, நரிக்குறவர் குடியிருப்பில், 130க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதிவாசிகளுக்கு, நான்கு சிறுமின்விசை பம்ப் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.தற்போது, ஒவ்வொரு வீடுகளுக்கும் குழாய்

உத்திரமேரூர் : காரணை ஊராட்சி, நரிக்குறவர் குடியிருப்புக்கு, புதிய கிணறு மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணி நடந்து வருகிறது.

உத்திரமேரூர் ஒன்றியம், காரணை ஊராட்சி, நரிக்குறவர் குடியிருப்பில், 130க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதிவாசிகளுக்கு, நான்கு சிறுமின்விசை பம்ப் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.தற்போது, ஒவ்வொரு வீடுகளுக்கும் குழாய் அமைத்து குடிநீர் வழங்க, மத்திய அரசின், 'ஜல் ஜீவன் மிஷன்' திட்டத்தில், புதிய கிணறு அமைத்து, 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உடைய மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு வருகிறது.

உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இப்பணி, ஒரு மாதத்தில் முடிக்கப்பட்டு, பகுதிவாசிகள் ஒவ்வொரு வீட்டிற்கும், தனித்தனி குழாய் இணைப்பு வழங்கப்பட்டு, குடிநீர் வினியோகிக்கப்படும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X