சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆக்கிரமிப்பு கட்டடத்தால் பள்ளி சுற்றுச்சுவர் சேதம்

Added : நவ 16, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
வாலாஜாபாத் : வாலாஜாபாத் அரசு பள்ளி சுற்றுச்சுவரை சேதப்படுத்தி, தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக, புகார் எழுந்துள்ளது. வாலாஜாபாத் - படப்பை சாலையில், அரசு ஆண்கள்மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 350க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர்.இப்பள்ளிக்கு, 'நபார்டு' வங்கி உதவியுடன், புதிய கட்டடம் மற்றும் சுற்றுச்சுவர் கட்டி முடிக்கப்பட்டு

வாலாஜாபாத் : வாலாஜாபாத் அரசு பள்ளி சுற்றுச்சுவரை சேதப்படுத்தி, தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக, புகார் எழுந்துள்ளது.
வாலாஜாபாத் - படப்பை சாலையில், அரசு ஆண்கள்மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 350க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர்.இப்பள்ளிக்கு, 'நபார்டு' வங்கி உதவியுடன், புதிய கட்டடம் மற்றும் சுற்றுச்சுவர் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில், பள்ளி கட்டடத்தை ஒட்டியுள்ள குடியிருப்புவாசிகள் சிலர், பள்ளி சுற்றுச்சுவரை சேதப்படுத்தி, கூடுதல் கட்டடம் கட்டி வருகின்றனர். இதை தடுக்க முடியாமல், பள்ளி நிர்வாகம் தடுமாறுகிறது.

இதே நிலை நீடித்தால், பள்ளிக்கு சொந்தமான நிலம் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது என, சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.எனவே, மாவட்ட கல்வித் துறையினர் முறையாக ஆய்வு செய்து, ஆக்கிரமிப்பு கட்டடம் கட்டுவோர் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajaiah Samuel Muthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
16-நவ-202010:57:23 IST Report Abuse
Rajaiah Samuel Muthiahraj காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் எல்லா வகை ஆக்கிரமிப்புகளுக்கும் விதிவிலக்கு உண்டு காரணம் அநேக அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் அநேக இடங்களில் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர் மேலும் ஆங்காங்கு கோவில்களையும் பக்திக்காக என்றில்லாமல் தங்களது இடங்களுக்கு ஒரு பாதுகாப்புக்காக கட்டிக்கொள்ளுவார்கள் வோட்டுகளுக்காக மற்றும் நோட்டுகளுக்காக ரோட்டினையும் விட்டுக்கொடுக்கும் விசால மனப்பான்மை கொண்டு ரோட்டின் விசாலத்தினை குறைத்து விடுவார்கள் ஏழை ஜனங்களும் ஏமாந்து விடுவார்கள் உண்மையான ஏழைகடக்கு மட்டும் அரசு மாற்று இடம் மற்றும் வீடு கொடுத்துவிட்டு அநியாய ஆக்கிரமிப்புகளை அகற்றிட முன்வந்தால் காஞ்சிபுரம் காஞ்சிப்போகாமல் காப்பாற்றப்படும் நீதியின் கடவுள் என்றாவது ஒருநாள் வீதிக்கு கொண்டுவருவார் லஞ்சம் வாங்காத அதிகாரிகள் உண்மையும் உறுதியும் கொண்ட அலுவலர்கள் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X