பொது செய்தி

தமிழ்நாடு

சீரமைக்கப்படுமா! உடைந்து தூர்ந்து போன தண்டலை ஏரி மதகுகள்...பாசனத்திற்கு வழியின்றி விவசாய நிலங்கள் பாதிப்பு

Added : நவ 16, 2020
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : தண்டலை பெரிய ஏரியில் உடைந்து போன மதகுகளை பொதுப்பணித் துறையினர் சீரமைக்காததால், ஏரிபாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் பயிர் செய்ய முடியாமல் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். ஏரியின் மதகுகளை சீரமைக்க கலெக்டர் கிரண்குராலா நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளக்குறிச்சி அடுத்த தண்டலை பெரிய ஏரி, சுமார் 250 ஏக்கர் பரப்பளவை கொண்டுள்ளது. பொதுப்பணித்துறை

கள்ளக்குறிச்சி : தண்டலை பெரிய ஏரியில் உடைந்து போன மதகுகளை பொதுப்பணித் துறையினர் சீரமைக்காததால், ஏரிபாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் பயிர் செய்ய முடியாமல் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

ஏரியின் மதகுகளை சீரமைக்க கலெக்டர் கிரண்குராலா நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளக்குறிச்சி அடுத்த தண்டலை பெரிய ஏரி, சுமார் 250 ஏக்கர் பரப்பளவை கொண்டுள்ளது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரிக்கு, பருவ மழை காலங்களில் சூளாங்குறிச்சி மணிமுக்தா அணையில் தண்ணீர் திறக்கும்போது, நீர் வரத்து ஏற்படுகிறது. இந்த ஏரியை நம்பி 500 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. ஏரி நீர் பாசனம் மூலம் நெல், கரும்பு உட்பட பல்வேறு வகையான பயிர்கள் சாகுபடி செய்யப் படுகிறது.

ஏரியில் முழு கொள்ளளவு தண்ணீர் தேங்கினால் சுற்று வட்டார பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து கிணற்று நீர் பாசனம் மற்றும் குடிநீர் தேவையும் பூர்த்தி ஆகும். ஏரி நிரம்பும்போது ஏரியில் உள்ள மூன்று மதகுகள் வழியாக விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், உரிய பராமரிப்பின்மையால் கடந்த நான்கு ஆண்டு களுக்கு முன்பு ஏரி மதகுகளில் லேசாக உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது. ஏரியின் மதகுகளை சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்ககோரி கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால், பருவ மழை காலங்களில் ஏரியில் தண்ணீர் தேக்கமின்றி விரைவாக வெளியேறி வற்றி போனது. கடந்தாண்டு பருவமழையின் போது சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலுக்கு அருகே உள்ள ஏரியின் மதகு முற்றிலும் உடைந்து இடிந்து விழுந்தது. இதனால், ஏரியில் தேங்கும் சிறிதளவு தண்ணீரும் தொடர்ந்து வெளியேறியது. இதனையடுத்து, கிராம மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தையடுத்து, தற்காலிகமாக மதகு பகுதியில் மண்ணை கொட்டி தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால், அதன்பின் நிரந்தர தீர்வுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. ஏரியின் மதகு வழியாக விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டிய சூழ்நிலையில், தற்போது முற்றிலும் மதகு துார்ந்து போய், தண்ணீர் செல்வதற்கான வாய்ப்புகள் இன்றி உள்ளது. இதனால், ஏரி பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.எனவே, உடைந்து துார்ந்துபோய் கிடக்கும் தண்டலை ஏரியின் மதகுகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூலம் சீரமைப்பதற்கு கலெக்டர் கிரண்குராலா நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X