உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை - பண்ருட்டி பிரதான சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயகற்ற நிலையில் உள்ளது
.உளுந்துார்பேட்டை - பண்ருட்டி, கடலுார் மார்க்கமாக செல்லும் சாலையில் தினந்தோறும் 300க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கிறது. இந்த சாலையில் திருநாவலுார் அருகே ஆங்காங்கே குண்டும், குழியுமாக மாறியுள்ளது.இது குறித்து புகார் தெரிவித்தும் சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவவடிக்கை எடுக்கவில்லை. இருசக்கர வாகன ஓட்டிகள் சிலர் பள்ளத்தில் இறங்காமலிருக்க எதிர்திசை சாலையில் விதிமுறை மீறி செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் மற்றும் கனரக வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.வாகன ஓட்டிகளின் ஆபத்தான நிலையை கருத்தில் கொண்டு, சாலையை சீரமைப்பதற்கான நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE